கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டபோது சேலையில் தீப்பிடித்து கல்லூரி பேராசிரியை சாவு


கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டபோது சேலையில் தீப்பிடித்து கல்லூரி பேராசிரியை சாவு
x
தினத்தந்தி 27 Dec 2021 5:17 AM IST (Updated: 27 Dec 2021 5:17 AM IST)
t-max-icont-min-icon

கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டபோது சேலையில் தீப்பிடித்து, ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை பரிதாபமாக இறந்தார்.

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை

சின்ன காஞ்சீபுரம் சேஷாத்திரி பாளையம் பழனி தெருவை சேர்ந்தவர் சரவணபவன் (வயது 70). இவரது மனைவி ஜெயலட்சுமி (67). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.

கணவன், மகளுடன் வசித்து வந்த ஜெயலட்சுமி தனது வீட்டில் பூஜை செய்வதற்காக கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

சாவு

ஜெயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அவரது கணவர் சரவணபவன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து படுகாயத்துடன் போராடிய ஜெயலட்சுமியை உடனடியாக மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story