பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு

பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வரும் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் எம்.ஐ. செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் 20 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 21-ந்தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை நேற்று நிறைவுபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் கிடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் தங்கி இருந்த உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாகவும், தரமற்ற உணவு சாப்பிட்ட ஊழியர்கள் 8 பேர் இறந்து போனதாக வெளியான வதந்தியையடுத்து பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் அருகே விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






