வடக்குப்பட்டு கிராமத்தில் பட்டா பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம்

வடக்குப்பட்டு கிராமத்தில் பட்டா பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம் நடந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான கணினி பட்டா தொடர்பான பெயர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று தீர்வு காணும் வகையில், கிராம அளவிளான முகாம் வடக்குப்பட்டு கிராம நிர்வாக அலுவலக பகுதியில் நடந்தது. இதற்கு ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன் தலைமை தாங்கினார்.
வடக்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் நந்தினிமேத்தா வசந்தகுமார், துணை தாசில்தார் தாட்சாயணி, வருவாய் ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டா தொடர்பான திருத்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






