சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்


சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்
x
தினத்தந்தி 30 Dec 2021 9:56 AM GMT (Updated: 30 Dec 2021 9:56 AM GMT)

போதை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறியும் பணியில் ஈடுபட சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகாவில் மோப்ப நாய் பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களான ஒரியோ, ஆர்லியோ ஆகியவை ஒப்படைக்கும் விழா நடந்தது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனரகம் மூலமாக விமான நிலையம் மற்றும் சரக்கக பிரிவானது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சுங்க விதிகளுக்குட்பட்டு தங்கம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களை கொண்டு வருகிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் போதை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறியும் பணியில் ஈடுபட சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகாவில் மோப்ப நாய் பிரிவு என புதிதாக தொடங்கப்பட்டது. இந்த மோப்ப நாய் பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களான ஒரியோ, ஆர்லியோ ஆகியவை ஒப்படைக்கும் விழா நடந்தது. சென்னை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் தலைமை தாங்கினார்.

தமிழகம், புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க இலாகா தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம், சுங்க இலாகா கமிஷனர் பழனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story