ராஜஸ்தானில் பதுங்கிய கொள்ளையன் கைது

செல்போன் கடைகளில் ரூ.20½ லட்சத்தை சுருட்டிவிட்டு ராஜஸ்தானில் பதுங்கிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
கோவை
செல்போன் கடைகளில் ரூ.20½ லட்சத்தை சுருட்டிவிட்டு ராஜஸ்தானில் பதுங்கிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
கொள்ளை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதாப், ராஜூ ஆகியோர் கோவையில் தங்கியிருந்து, காந்திபுரம் கிராஸ்கட் 8-வது வீதியில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த 13-ந் தேதி இரவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தனர். அப்போது மர்ம ஆசாமிகள் ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் விரைந்து நடத்தினர்.
ராஜஸ்தானில் கைது
அப்போது, அந்த செல்போன் கடையில் 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டதும், அவர்கள் மற்றொரு கடையிலும் ரூ.50 ஆயிரத்தை திருடி இருப்பதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்தது. மேலும் ராஜஸ்தானுக்கு தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து ராஜஸ்தானுக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட பிரித்வி பாரதி(வயது 27) என்பவரை உள்ளூர் போலீசார் உதவியுடன் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






