நாகூர் தர்காவில், 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில், 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகூர்:
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில், 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கந்தூரி விழா
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா 4-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது.
பாய்மரம் ஏற்றப்பட்டது
இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் சாகிபு மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது.
அதை தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிக்கொடுத்த பெரிய மினரா, தலைமாட்டு மினரா, முதுபக் மினரா, ஒட்டு மினரா ஆகிய 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள், மற்றும் தர்கா தற்காலிக நிர்வாக குழுவினர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story