கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன


கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
x
தினத்தந்தி 1 Jan 2022 10:02 PM IST (Updated: 1 Jan 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தியேட்டர், ஓட்டல்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

கோவை

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தியேட்டர், ஓட்டல்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

ஒமைக்ரான் அச்சுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்துவதாலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு அறிவித்தது. அதன்படி ஓட்டல்கள், விடுதிகள், பூங்காக்கள், தியேட்டர்கள், ஜவுளிக்கடைகள், பேக்கரிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். மேலும் பஸ்களில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணம் செய்ய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் அடங்கும்.

50 சதவீதம் பேருக்கு அனுமதி

இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி கோவை மாவட்டத்தில் அரசு குறிப்பிட்டப்படி தியேட்டர்கள், பூங்காக்கள், ஓட்டல்களில் நேற்று 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணித்தனர். இது தவிர அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பஸ்களில் பயணிக்க கண்டக்டர்கள் அனுமதித்தனர். லண்டனில் இருந்து கோவை திரும்பிய முதியவர் ஒருவருக்கு நேற்று முன்தினம் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. எனவே கோவையில் புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும் முழுமையாக கடைபிடித்து தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story