பூங்காக்களில் அலைமோதிய பொதுமக்கள்
பூங்காக்களில் அலைமோதிய பொதுமக்கள்
கோவை
கோவை மாவட்டத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு பிறக்கும் இரவு ஆட்டம் பாட்டத்துடன் ஆரவாரமாக கொண்டாடப்படும். அப் போது புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவையில் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் சாரைசாரையாக சென்று பொது இடங்களில் வைத்து கேக் வெட்டி கொண்டாடுவார்கள்.
தற்போது கொரோனா உருமாறி உலகையே ஆட்டிப்படைக்கும் ஒமைக்ரான் வைராக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. கோவையில் ஆங்கில புத்தாண்டை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் கோவையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டையொட்டி நேற்று விடுமுறை என்பதால் கோவையில் வ.உ.சி. பூங்கா உள்பட பல்வேறு பூங்காக்களில் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் அதிகளவு வந்ததால் வ.உ.சி. பூங்காவில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பூங்கா ஊழியர்கள் அறிவுறுத்தினர். கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சூர்யா தனது மோட்டார் சைக்கிளில் சிறிய பலூன்கள், அலங்கார பல்ப், ரோஜா பூக்களை ஒட்டி வைத்தபடி கோவை நஞ்சப்பா சாலை, வ.உ.சி. பூங்கா உள்பட இடங்களில் வலம் வந்தார். அவர் தனது தோளில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை துப்பாக்கி, தொப்பி அணிந்து சென்றார்.
Related Tags :
Next Story