கிருஷ்ணர் சிலை உடைப்பு
கோவை பாரதி பூங்காவில் கிருஷ்ணர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
கோவை
கோவை பாரதி பூங்காவில் கிருஷ்ணர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சிலை உடைப்பு
கோவை சாய்பாபா காலனியில் பாரதி பூங்கா உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு கிருஷ்ணர் சிலை ஒன்று இருந்தது.
இதை பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையில் அந்த கிருஷ்ணர் சிலை உடைந்து கிடந்தது. அதை மர்ம ஆசாமிகள் யாரோ சேதப்படுத்தி உள்ளனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசுக்கு, பூங்கா ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உடைந்து கிடந்த சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கண்டனம்
இதற்கிடையில் கிருஷ்ணர் சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்ததும், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளனர்.
இதில் ஈடுபட்ட ஆசாமிகளை கைது செய்யக்கோரி இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் தனபால் தலைமையில் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story