செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 168 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 168 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,547 பேர் உயிரிழந்துள்ளனர். 767 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,268 பேர் உயிரிழந்துள்ளனர். 234 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story