சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
ஆனைமலை
ஆனைமலை அருகே ஆசைவார்த்தைக்கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சிறுமி பலாத்காரம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் கணேசன் (வயது 23). லாரி டிரைவர். ஒரு ஆண்டுக்கு முன்பாக இவர் சரிவர வேலை இல்லாமல் இருந்துள்ளார். இவரது பெரியப்பா வீடு பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ளது. இதனால் அங்கு வந்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் கணேசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து கணேசன் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி வெளியிடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
வாலிபர் சிறையில் அடைப்பு
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றனர். பரிசோதனையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னுடன் பழகிய கணேசன் தனக்கு ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி கணேசன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story