வாலிபர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவையில் சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை வாலிபர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை
கோவையில் சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை வாலிபர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இளம்பெண்ணுக்கு மிரட்டல்
நெல்லையை சேர்ந்த இம்மானுவேல் ராஜன்(வயது 35) என்பவர், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது அவருக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேசி வந்தனர்.
அதை இம்மானுவேல் ராஜன் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் தன்னை காதலிக்காவிட்டால், அதை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவேன் எனக்கூறி அந்த இளம்பெண்ணை மிரட்டினார். இதுகுறித்த புகாரின்பேரில் அவரை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
இந்த நிலையில் இம்மானுவேல் ராஜன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, கோவை மத்திய சிறையில் உள்ள இம்மானுவேல் ராஜனிடம் போலீசார் வழங்கினர்.
இதேபோன்று பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சத்தியா என்ற சத்திய நாராயணனை(47) போலீசார் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று அதற்கான உத்தரவை கலெக்டர் பிறப்பித்தார். அந்த உத்தரவு நகலை கோவை சிறையில் உள்ள சத்தியா என்ற சத்திய நாராயணனிடம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story