கோவை-சிங்கப்பூர் நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்


கோவை-சிங்கப்பூர் நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 2 Jan 2022 10:23 PM IST (Updated: 2 Jan 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட கோவை-சிங்கப்பூர் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவை

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட கோவை-சிங்கப்பூர் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கொரோனா பரவல்

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை, கோவா, டெல்லி, திருப்பதி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர சிங்கப்பூர், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவலால் கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து...

அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், அரபு நாடுகளில் வசித்து வந்த இந்தியர்கள் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது ஏர் அரேபியா சார்பில் சார்ஜா-கோவை இடையே அனைத்து வார நாட்களிலும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சிங்கப்பூர்-கோவை இடையே நேரடி விமான சேவை தொடங்காமல் இருந்ததால், சென்னை சென்று சிங்கப்பூர் செல்லும் நிலை ஏற்பட்டது. 

நேரடி விமான சேவை

இந்த நிலையில் வாரந்தோறும் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் கோவை-சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் கோவை வழியாக சிங்கப்பூர் செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, குறிப்பிட்ட நாட்களில் சிங்கப்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு கோவை வரும் விமானம் அன்றைய தினம் இரவு 11.45 மணிக்கு மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும். சிங்கப்பூரில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த விமான சேவையை பயன்படுத்தி கோவை வர முடியும். பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வருவதற்கு அனுமதி இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story