மளிகை கடையில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் மளிகை கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடையில் விற்கப்படுவதாக சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மற்றும் போலீசார் திருமுக்கூடல் பிள்ளையார் கோவில் அருகே சங்தோஷ் என்பவரின் மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது அவரது கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சந்தோசை கைது செய்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து அவரிடம் எங்கிருந்து குட்கா பொருட்கள் கிடைத்தது என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story