காஞ்சீபுரம் துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை


காஞ்சீபுரம் துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 3 Jan 2022 7:12 PM IST (Updated: 3 Jan 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் அந்த நேரத்தில் காஞ்சீபுரம் நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வேளியூர் துணை மின்நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

இத்தகவலை காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் ஏ.சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story