50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் பூராண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது50).விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று முன்தினம்மாலை 5 மணி அளவில் அவரது தோட்டத்தில்மேய்ந்து கொண்டிருந்தது. அப்போதுபசுமாட்டை நாய் ஒன்று வேகமாக துரத்தி உள்ளது. பயந்துபோன மாடுஅங்குமிங்கும் ஓடிதோட்டத்தில் இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
இதனை கண்டுஅதிர்ச்சி அடைந்தவிவசாயி கந்தசாமிஉடனடியாக சூலூர்
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து நிலை அலுவலர் கோபால் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புவீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி 20 அடி அளவு தண்ணீரில் தத்தளித்துகொண்டு இருந்த மாட்டை பெல்ட் மற்றும்கயிறுகட்டிகிரேன் உதவியுடன் 3 மணிநேரம்போராடி மீட்டனர். உயிருடன் மாட்டை மீட்டனர்.
Related Tags :
Next Story






