மீண்டும் 100-ஐ தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு
கோவையில் 16 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 100-ஜ தாண்டியது. நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று உறுதியானது.
கோவை
கோவையில் 16 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 100-ஜ தாண்டியது. நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று உறுதியானது.
105 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு, கடந்த 2 வாரத்துக்கும் மேலாக சற்று குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் நேற்று கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து 105 ஆனது.
இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 634 ஆக அதிகரித்து உள்ளது. இது தவிர நேற்று ஒரே நாளில் 86 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அதன்படி இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 217 பேர் குணமடைந்து உள்ளனர்.
ஒருவர் பலி
இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 518 ஆக அதிகரித்தது.
அத்துடன் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 899 ஆக உயர்ந்து உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போது 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story