தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மாணவியை கற்பழித்து கொன்ற தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை
மாணவியை கற்பழித்து கொன்ற தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பிணமாக சிறுமி மீட்பு
கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமி கடந்த மாதம் 13-ந் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையில் மறுநாள் காலையில் அவரது வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள முட்புதரில் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துக்குமார் (46) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
அப்போது சிறுமியின் தாயாருக்கும், முத்துக்குமாருக்கும் பழக்கம் இருந்ததும், அவர்களுக்குள் ஏற்பட்ட நகை-கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சிறுமி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. முன்னதாக சிறுமியை கற்பழித்த முத்துக்குமார் கழுத்தை இறுக்கி கொன்று, உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் பரிந்துரை செய்தனர். இதை ஏற்று அதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் பிறப்பித்தார். அந்த உத்தரவு நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முத்துக்குமாரிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story