திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து 43 பவுன் நகை கொள்ளை


திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து 43 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 4 Jan 2022 6:05 PM IST (Updated: 4 Jan 2022 6:05 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

நகை-பணம் கொள்ளை

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் அடுத்த கம்மவார்பாளையம் லட்சுமி பிரியா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 25-ந் தேதியன்று சென்னை வடபழனியில் உள்ள தனது தாய் தந்தையரை பார்ப்பதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சங்கிலி, வளையல், மூக்குத்தி, மோதிரம், ஆரம் என 43 பவுன் தங்க நகைகளும், ரூ.75 ஆயிரமும் கொள்ளை போனது தெரியவந்தது.

தடயங்கள் சேகரிப்பு

இச்சம்பவம் குறித்து மகேஸ்வரன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். மேலும் சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story