கோவையில் மூதாட்டி உள்பட 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா


கோவையில் மூதாட்டி உள்பட 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா
x
கோவையில் மூதாட்டி உள்பட 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா
தினத்தந்தி 4 Jan 2022 8:29 PM IST (Updated: 4 Jan 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மூதாட்டி உள்பட 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா

கோவை

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா தொற்றினால்பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.குறிப்பாக பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோவையில் ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் கோவையில் கொரோனா தொற்றுக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு எஸ் வகை ஜீன் இல்லாதது தெரியவந்தது. இந்த  வகை ஜீ்ன் இல்லா விட்டால் ஒமைக்ரான் வைரஸ் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று கண்டறிய சளி மாதிரி சென்னையில் உள்ள அரசு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் 3 பேரும் வெளிநாடுகளில்இருந்து திரும்பியவர்கள் கிடையாது. உள்ளூர் பொதுமக்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கே எஸ் வகை ஜீன் இல்லாதது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டி, 53 வயது ஆண், சுண்டக்காமுத்தூரை சேர்ந்த 69 வயது ஆண் ஆகியோரின் சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் அதில் எஸ் வகை ஜீன் இல்லாதது தெரியவந்தது.

 இதையடுத்து அவர்கள் 3பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் 3 பேருக்கும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் அவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்றுகண்டறிய சென்னையில் உள்ள அரசு ஆய்வகத்துக்கு அவர்களின் சளி மாதிரி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்களுக்கு ஒமைக்ரான் வகை வைரஸ்பாதிப்பு உள்ளதா? இல்லையா என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story