மெழுகுவர்த்தி ஏந்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2022 10:04 PM IST (Updated: 5 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

மெழுகுவர்த்தி ஏந்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி

நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி கிராம இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழில் கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், பணிநீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு கோட்ட துணை தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஜெகநாதன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் வட்ட கிளை தலைவர் பத்மநாபன், ஆரம்பள்ளி கூட்டணி சங்கம் தங்கபாசு, மாநில செயற்குழு உறுப்பினர் அய்யாசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் சின்ன மாரிமுத்து நன்றி கூறினார்.


Next Story