சரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதியது
சரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதியது
கிணத்துக்கடவு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி பகுதியை சேர்ந்த விவசாயி நல்லசாமி. இவர் தனது சரக்கு வாகனத்தில் மெட்டுவாவி பகுதியில் இருந்து சிக்கலாம்பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோ மற்றும் அரசு பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
Related Tags :
Next Story