15 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்


15 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 5 Jan 2022 10:04 PM IST (Updated: 5 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

15 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

சுல்தான்பேட்டை

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை தொடங்கி உள்ளது. மேலும் ஒமைக்ரான் பரவி வருவதோடு டெங்கு காய்ச்சல் பரவலும் தலை தூக்கி உள்ளது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது. மேலும் சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. 

இந்த நிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா, ஒமைக்ரான் மற்றும் டெங்கு தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வா.சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா 3-ம் அலை பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story