புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 129 பேருக்கு பாதிப்பு உறுதி


புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 129 பேருக்கு பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 6 Jan 2022 4:18 PM IST (Updated: 6 Jan 2022 4:18 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த மே, ஜூன் மாதங்களில் உச்சம் தொட்ட கொரோனா தொற்று அதன்பிறகு வெகுவாக குறைந்தது. கடந்த சில மாதங்களாக 50-க்கு கீழே பாதிப்பு குறைந்து இருந்து வந்தது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்றைய தினம் புதுச்சேரியில் புதிதாக 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் புதுச்சேரியில் 84 பேர், காரைக்காலில் 36 பேர், மாஹேவில் 8 பேர் மற்றும் ஏனாமில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் புதிதாக கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,881 ஆக உள்ளது. அதே சமயம் இன்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 1,27,541 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 399 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story