செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 596 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 596 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2022 8:46 PM IST (Updated: 6 Jan 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 596 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 549 பேர் உயிரிழந்துள்ளனர். 1,711 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,268 பேர் உயிரிழந்துள்ளனர். 450 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story