3 வயது சிறுமி திடீர் சாவு
3 வயது சிறுமி திடீர் சாவு
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் வசிப்பவர் சிலிமா மேட்டோ (வயது36). இவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் ஆகும். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயது சிறுமி இருந்தது. இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மில்லில் வேலை செய்து அங்கே உள்ளே விடுதியில் குடும்பத்தோடு தங்கி இருந்தார். இந்த நிலையில், சிறுமிக்கு கடந்த சில நாட்களாக முதுகு வலி இருந்ததால், அருகில் இருந்த மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமி மதிய வேளையில் தூங்கியபோது உடலில் எவ்வித அசைவும் இல்லாததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அந்த சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் ஆனைமலை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story