ஆட்டோ டிரைவர் பரிதாப சாவு
ஆட்டோ டிரைவர் பரிதாப சாவு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஜோதி நகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜமணிகண்டன் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். கோட்டூர் ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் எதிரே வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராஜமணிகண்டனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் உடுமலை ரங்கநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் (38) என்பதும், ரெட்டியாரூரில் மாட்டு சாணத்தை இறக்கி விட்டு, திரும்பி கோலார்பட்டிக்கு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story