கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
நெகமம்
நெகமத்தை அடுத்த கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேவணாம்பாளையம், வகுத்தம்பாளையம், கப்பளாங்கரை, குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், கக்கடவு, காணியாலாம் பாளையம், வலசுப்பாளையம், முள்ளுப்பாடி, ஆகிய பகுதிகளில் உள்ள ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது குறித்து கோவில்பாளையம் பகுதி விவசாயிகள்கூறுகையில், க
டந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால் தென்னை மரங்கள் காய்ந்து கருகியது.இதனால் விவசாயிகள் கவலையடைந்து காணப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கருகிய தென்னை மரங்கள் துளிர்விட தொடங்கியது. மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் உழவு செய்து கம்பு, சோளம், நிலக்கடலை, தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, வாழை, பொறியல் தட்டை, பச்சை மிளகாய், உள்பட பல்வேறு வகையானவை சாகுபடி செய்து இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஏ.பி.அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில்பாளையம் கிளைவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இந்த தண்ணீர் 7 நாட்களுக்கு தொடர்ந்து வருவதாலும், தற்போது மீண்டும் பருவ மழை பெய்தாலும் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றனர். மழை பெய்யாத நிலையில் தற்போது பி.ஏ.பி.வாய்க்கால் மூலம் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story