கட்டையால் அடித்து தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
கட்டையால் அடித்து தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த மக்கள் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர சுதாகர் (வயது21). இவர் அதே பகுதியில் உள்ள பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த ஒரு வருடமாக அதே பண்ணையில் தங்கி வேலை செய்து வரும் மதுரையை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இதுகுறித்து பண்ணையின் உரிமையாளருக்கு தெரியவந்ததால் அந்த நபர் ஹரிஹர சுதாகரை அழைத்து அறிவுரை உள்ளார். மேலும் அந்த பண்ணையில் வேலை செய்த கேசவன், காளிமுத்து, ராமன், ராசாத்தி மற்றும் 2 வடமாநில வாலிபர்கள் ஹரிஹர சுதாகரை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ஹரிஹர சுதாகர் ஆனைமலை அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பெண் உள்பட 6 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story