பொள்ளாச்சி நகரில் குரங்குகள் அட்டகாசம்


பொள்ளாச்சி நகரில் குரங்குகள் அட்டகாசம்
x
பொள்ளாச்சி நகரில் குரங்குகள் அட்டகாசம்
தினத்தந்தி 9 Jan 2022 9:55 PM IST (Updated: 9 Jan 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகரில் குரங்குகள் அட்டகாசம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரி வீதி, ஜூப்லி கிணறு வீதியில் கடந்த சில நாட்களாக எங்கு இருந்தோ வந்தமூன்று குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்துவருகிறது. 

அந்த வழியாக நடந்து செல்பவர்களை வேமாக ஓடிவந்து கத்தி கூச்சலிட்டு மிரட்டுவது, கையில் உள்ளதின்பண்டங்களை பறிப்பது, வீடுகள், கடைகளில்புகுந்து பொருட்களை எடுத்து வீசிசேதப்படுத்துவதுபோன்ற சேட்டைகளில் குரங்குகள் ஈடுபட்டுவருகின்றன. 

இதனால், இருவீதி பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள பகுதி பொதுமக்களும் தங்களை குரங்குகள் கடித்துவிடுமோ என அச்ச மடைந்துள்ளனர். எனவே, தங்கள்அச்சத்தைபோக்கும்வகையில், பொள்ளாச்சி வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்தவனப்பகுதியில் விடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story