விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது


விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
x
விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
தினத்தந்தி 9 Jan 2022 10:08 PM IST (Updated: 9 Jan 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது

சுல்தான்பேட்டை,

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன.இந்த தறிகளில் காடாத்துணி மற்றும் பாலிஸ்டர் ரக துணிகள்உற்பத்தி செய்யப்படுகிறது. பெருமளவு காடாத்துணிகள்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இவ்வாறு, உற்பத்தி செய்யப்படும் துணிகள்ஈரோடு, மும்பை, அகமாதா பாத், சூரத் உள்படபல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு, அங்கு சாயமேற்றப்பட்டு போர்வை, பேன்ட், சர்ட்,திரைசீலை, தரைவிரிப்பான் என பல்வேறு விதமான பொருட்களாக மதிப்பு கூட்டப்பட்டுபின் விற்பனைக்கு சந்தையிடப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 2014-ம்ஆண்டு முதல் கூலி உயர்வு ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.புதிய கூலி உயர்வை அமல்படுத்த கோரிதிருப்பூரில் அமைச்சர் சாமிநாதன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்மற்றும் கலெக்டர் முன்னிலையில் இருதரப்பினரிடையே கூலி உயர்வு ஒப்பந்தம் சமீபத்தில் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதம் மற்ற இதர ரகங்களுக்கு20 சதவீதம் கூலி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கூலி உயர்வு அமல் படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் காலதாமதம்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இதன் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் புதிய கூலி உயர்வை உடனடியாக வழங்க கோரி நேற்று முதல் தங்கள் தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்டசுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம்விசைத்தறிகள் உள்ளன. இந்த வேலைநிறுத்தத்தால் தினமும் சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் துணி உற்பத்தி இழப்புஏற்படும். இதனால் தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து விசைத்தறியாளர்கள்கூட்டமைப்பின் மாநில செயலாளர் வேலுச்சாமிகூறியதாவது:- புதிய கூலி உயர்வு அமல்படுத்தப்படவில்லையெனில் பொங்கல்பண்டிகை வரை போராட்டம் தொடரும். அதற்குபின் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துவிவாதித்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story