மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகராறு
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 47), கூலித்தொழிலாளி. இவருக்கு காசியம்மாள் என்ற மனைவி உள்ளார். ஆனந்தன் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவர், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் மது குடித்துவிட்டு வந்த ஆனந்தன், காசியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார்.. இதனால் காசியமமாள் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தற்கொலை
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ஆனந்தன் நேற்று முன்தினம் வரதாபுரம் முள்புதர் காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பொதுமக்கள் சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story