கீழ்ப்பாக்கத்தில் துணை கமிஷனர் வாகனத்தில் மோதிய கார்
கீழ்ப்பாக்கத்தில் துணை கமிஷனர் கார்த்திகேயனின் காரின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
சென்னை வேப்பேரி, ஜோதி வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் செய்யது நிசர் அகமது (வயது 54). இவர் நேற்று முன்தினம் மாலை கீழ்ப்பாக்கம் ரங்கநாதன் அவென்யூ சாலை, சில்வன் லாட்ஜ் காலனி முதல் தெருவில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஓடியது.
அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயனின் காரின் மீது மோதியது. இதில் 2 காரும் பெரும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story