தேன்கனிக்கோட்டை அருகே 180 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா


தேன்கனிக்கோட்டை அருகே 180 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
x
தினத்தந்தி 11 Jan 2022 5:04 PM GMT (Updated: 11 Jan 2022 5:04 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே 180 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

தேன்கனிக்கோட்டை:
சமுதாய வளைகாப்பு
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காமகிரி கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதற்கு கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். விழாவில் பெட்டமுகிலாளம், கொடகரை, காமகிரி, ஆலள்ளி, போலகொல்லை, கருக்கா கொல்லை, சித்தாபுரம், கோட்டையூர்கொல்லை, ஜெய்புரம், தொழுவமலை மற்றும் குள்ளட்டி உள்பட பல்வேறு மலைக்கிராமங்களை சேர்ந்த 180 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடந்தது. 
அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்பட 21 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. 
அறிவுரை
மேலும் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மலைக்கிராமங்களில் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். அதிக அளவில் குழந்தைகள் பெற்று கொள்ளக்கூடாது. குழந்தைகளுக்கு 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் ஊட்ட வேண்டும். டாக்டர்கள் அறிவுரைப்படி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 
விழாவில் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி துறை அலுவலர் தமிழரசன், உனிசெட்டி மருத்துவ அலுவலர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story