போக்சோவில் வாலிபர் கைது


போக்சோவில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2022 10:47 PM IST (Updated: 12 Jan 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

போக்சோவில் வாலிபர் கைது

கிணத்துக்கடவு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வினீத்குமார்(வயது 19). கட்டிட தொழிலாளி. இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவளை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 

அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. பின்னர் கிணத்துக்கடவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அந்த வாலிபரை கைது செய்தனர்.


Next Story