மாவட்ட செய்திகள்

விபத்து வழக்கில் கோர்ட்டு வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டு தொகை உரியவரிடம் ஒப்படைக்காமல் ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த வக்கீலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். + "||" + Lawyer arrested for defrauding Rs 3 lakh in accident case

விபத்து வழக்கில் கோர்ட்டு வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டு தொகை உரியவரிடம் ஒப்படைக்காமல் ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த வக்கீலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

கோவை

விபத்து வழக்கில் கோர்ட்டு வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டு தொகை உரியவரிடம் ஒப்படைக்காமல் ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த வக்கீலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விபத்தில் வாலிபர் சாவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 25). இவர் கடந்த 2011-ம் ஆண்டு தாராபுரத்தில் பஸ் மோதி இறந்தார். இதையடுத்து சண்முகசுந்தரத்தின் தந்தை பாலசுப்பிரமணியம், தாய் ஈஸ்வரி ஆகியோர் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தாராபுரம் சப்-கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, 10.4.2015 அன்று சண்முகசுந்தரத்தின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்தை இழப்பீட்டு தொகையாக வழங்குமாறு இன்சுரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

மோசடி

இதனைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சார்பில் ஆஜரான வக்கீல் முருகேசன், கோர்ட்டு குமாஸ்தா பாஸ்கர் ஆகியோர் சேர்ந்து வழக்கு ஆவணத்தில் இருந்து பாலசுப்பிரமணியம், ஈஸ்வரி ஆகியோரின் புகைப்படத்தை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக போலியான நபர்களின் போட்டோக்களை ஒட்டியுள்ளனர். 

பின்னர் அவர்கள் போல் கையெழுத்திட்டு இழப்பீட்டு தொகை ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்ததாக தெரிகிறது. இதற்கு கோர்ட்டு குமாஸ்தா பாஸ்கரும் உடந்தையாக இருந்துள்ளார்.

மகன் இறந்ததற்கு இழப்பீடு தொகை கிடைக்காததால், பாலசுப்பிரமணியம் மீண்டும் கோர்ட்டை அணுகினார். அப்போதுதான் இழப்பீட்டு தொகையை வக்கீல் மோசடி செய்தது தெரியவந்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு

இதுதொடர்பாக 2019-ம் ஆண்டு பாலசுப்பிரமணியம் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் கோர்ட்டு குமாஸ்தா ஓய்வு பெற்றுவிட்டார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் வக்கீல் முருகேசன் தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையில், வக்கீல் முருகேசன் போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், பாலசுப்பிரமணியத்தின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகையை செலுத்தினார். 

ஆனாலும் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். இதனால் 2021-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவின்படி கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராதா, தனலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

வக்கீல் கைது

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வக்கீல் முருகேசனை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை விரைந்து சென்று,  முருகேசனை பிடித்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை மோசடி வழக்கில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.