மாவட்ட செய்திகள்

பூந்தமல்லியில் பஸ்சின் மேற்கூரை மீது அமர்ந்து ரகளை செய்த பள்ளி மாணவர்கள் + "||" + School children sit on the roof of a bus in Poonamallee

பூந்தமல்லியில் பஸ்சின் மேற்கூரை மீது அமர்ந்து ரகளை செய்த பள்ளி மாணவர்கள்

பூந்தமல்லியில் பஸ்சின் மேற்கூரை மீது அமர்ந்து ரகளை செய்த பள்ளி மாணவர்கள்
வெள்ளவேடு செல்லும் அரசு பஸ்சில் பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பஸ்சின் மேற்கூரையில் மீது அமர்ந்து கோஷம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு காரணமாக 10 முதல் பிளஸ்-2 வரை மட்டுமே பள்ளியில் வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசு பஸ்களில் 75 சதவீதம் பயணிகள் பயணம் செய்ய தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், நேற்றைய தினம் சைதாப்பேட்டையில் இருந்து வெள்ளவேடு செல்லும் அரசு பஸ்சில் பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது அவர்கள் கல்லறை நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென பஸ்சின் மேற்கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டு கோஷமிட்டனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்த நிலையில், காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசு பஸ்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் மீது அமர்ந்து கோஷம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் 9 பேரும் பாதிக்கப்பட்டனர்.
2. பூந்தமல்லி: மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று..!
பூந்தமல்லியில் மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. “எல்லோரும் இருந்தும் தனியாகத்தான் இருக்கிறேன்” - பூந்தமல்லியில் கேரள வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..!
உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அப்படியே பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. பூந்தமல்லியில் உள்ள போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மழைநீர்..!
பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது.
5. பூந்தமல்லியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட எல்.கே.பி. நகர், தனலட்சுமி நகர் ஆகிய பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது. மழைநின்று ஒரு வாரமாகியும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.
!-- Right4 -->