மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி ஊராட்சிகளில் சிறப்பு பணிகள் + "||" + Special functions in the panchayats on the occasion of Pongal festival

பொங்கல் பண்டிகையையொட்டி ஊராட்சிகளில் சிறப்பு பணிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி ஊராட்சிகளில் சிறப்பு பணிகள்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் வரவிருக்கும் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு வண்ணம் பூசுதல், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களை தூய்மைப்படுத்துதல், கிராம ஊராட்சிகள் தோறும் வேம்பு, புங்கன், மா, கொய்யா போன்ற பலன் தரும் 100 மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் கிராம ஊராட்சிகள் தோறும் ஓமைக்ரான் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பண்டிகை: போக்குவரத்துக்கழகத்திற்கு ரூ.138 கோடி வருவாய்
பொங்கலையொட்டி அரசு பேருந்துகள் மூலம் ரூ.138.07 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
2. பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.119 கோடி வருவாய் - அரசு போக்குவரத்துத்துறை தகவல்
பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழ் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் - அமித்ஷா
உள்துறை மந்திரி அமித்ஷா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து...!
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்: சீறிப்பாய்ந்த காளைகள்...!
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
!-- Right4 -->