மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி + "||" + Corona confirms to Sub-Inspector

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி
நெகமத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதியானது. இதையொட்டி போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெகமம்

நெகமத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதியானது. இதையொட்டி போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நெகமம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதனால் அவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சப்-இன்ஸ்பெக்டருக்கு, தொற்று பாதித்து இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். 

கிருமி நாசினி தெளிப்பு

இதற்கிடையில் நெகமம் போலீஸ் நிலையத்தில் அவருடன் பணியாற்றிய போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. 
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பயன்படுத்திய அறை உள்பட போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.