மாவட்ட செய்திகள்

கோர்ட்டு உதவியாளரை தாக்கியவர் மீது வழக்கு + "||" + Case against the assailant of the court assistant

கோர்ட்டு உதவியாளரை தாக்கியவர் மீது வழக்கு

கோர்ட்டு உதவியாளரை தாக்கியவர் மீது வழக்கு
கோர்ட்டு உதவியாளரை தாக்கியவர் மீது வழக்கு
கிணத்துக்கடவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் மூர்த்தி(வயது 58). இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பவரது வீட்டுக்கு வழக்கு தொடர்பான நீதிமன்ற சம்மனை வழங்க சென்றார். அப்போது அங்கிருந்த கண்ணப்பனின் மகன் விக்னேஷ்(31) திடீரென அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளார்.

இதுகுறித்து நீதிமன்ற அலுவலக உதவியாளர் மூர்த்தி, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.