பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்


பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2022 4:51 PM GMT (Updated: 13 Jan 2022 4:51 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோவை

பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 18-ந் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. 

இதே போல் கொரோனா காரணமாக கல்லூரிகளுக்கு 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவையில் தங்கி பணியாற்றும் சேலம், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று சொந்த ஊருக்கு கிளம்பினர்.

இதனால் நேற்று கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வெளியூர்களுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும் அந்த பஸ்களில் நிற்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் காணப்பட்டது. 

மேலும் கோவை ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர் முண்டியடித்து ரெயில் பெட்டிகளில் ஏறியதை காணமுடிந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

நேற்று பஸ், ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

Next Story