மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + Chengalpattu District Singapperumal Temple Sorgavasal Thirappu

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பத்தர்களுக்கு காட்சியளித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பழமைவாய்ந்த பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் வைகுண்டஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விஷேசம். ஆண்டுதோறும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள் மேலும் அன்றைய தினம் முழுவதும் அன்னதானங்கள் நடைபெறும். இந்த நிலையில் நேற்று இந்த கோவிலில் காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது மிக்குறைந்த அளவிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பத்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களின் வசதிக்காக நீண்டதூரம் தடுப்பு கட்டைகள் அமைந்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்றால் பக்தர்கள் கூட்டம் மிக குறைவாக காணப்பட்டது.

இதுபோல செங்கல்பட்டு வேதாந்த தேசிகர் சீனிவாசபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் அதிகாலை 4.30 மணிக்கும், கோதண்டராமர் பெருமாள் கோவிலில் காலை 6.20 மணிக்கும் திறக்கப்பட்டது. அங்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு: வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கு: 2 பேர் என்கவுன்ட்டர்...!
வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார டாக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.
3. செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பிணமாக மீட்பு
செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் உரிமம் ரத்து: வேளாண்மை அதிகாரி
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. செங்கல்பட்டில் அரசு சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைகள் சார்பாக ரூ.1 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.