மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை + "||" + Engineer commits suicide in frustration of not getting a job

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தசயனன் (வயது 28). என்ஜினீயர். இவர் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்தார். கடந்த 10-ந்தேதி இரவு வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனந்தசயனனை மீட்டு அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.