மாவட்ட செய்திகள்

தோழியுடன் குடும்பம் நடத்திய ஐ.டி. ஊழியர் தற்கொலை + "||" + IT Employee suicide

தோழியுடன் குடும்பம் நடத்திய ஐ.டி. ஊழியர் தற்கொலை

தோழியுடன் குடும்பம் நடத்திய ஐ.டி. ஊழியர் தற்கொலை
கோவையில் மனைவி, மகனை பிரிந்து தோழியுடன் குடும்பம் நடத்திய ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை

கோவையில் மனைவி, மகனை பிரிந்து தோழியுடன் குடும்பம் நடத்திய ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

ஐ.டி. ஊழியர்

கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் நிஷாந்த்(வயது 37). ஐ.டி. ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 8 வயது மகனும் உள்ளனர். எனினும் நிஷாந்த் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். 

சமீபத்தில் நிஷாந்த் தன்னுடைய சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டு பெங்களூருவில் உள்ள மற்றொரு ஐ.டி. நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல போவதாக கூறினார். ஆனால் பெங்களூருவுக்கு செல்லாமல் கோவையில் உள்ள மற்றொரு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, 37 வயது பெண் தோழியுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொங்கல் தினத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு படுக்கைக்கு சென்ற நிஷாந்த் திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீசார் விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது தோழியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மனைவி, மகனை பிரிந்து இருந்த நிலையில் பொங்கல் தினத்தன்று அவர்களுடன் இருக்க முடியவில்லையே என்று நிஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. மேலும் கடன் பிரச்சினையாலும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.