மாவட்ட செய்திகள்

கோவையில் 1,732 பேருக்கு கொரோனா + "||" + Corona for 1732 people in Coimbatore

கோவையில் 1,732 பேருக்கு கொரோனா

கோவையில் 1,732 பேருக்கு கொரோனா
கோவையில் 1,732 பேருக்கு கொரோனா
கோவை

கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலின்படி கோவையில் 1,732 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 884 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோவையை சேர்ந்த 95 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 529 பேர் இறந்து உள்ளனர். கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 582 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 875 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 7 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.