மாவட்ட செய்திகள்

கோவையில் வழிபாட்டு தலங்கள் மூடல் + "||" + Closure of places of worship in Coimbatore

கோவையில் வழிபாட்டு தலங்கள் மூடல்

கோவையில் வழிபாட்டு தலங்கள் மூடல்
கோவையில் தொடர்ந்து 2-வது வாரமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
கோவை

கோவையில் தொடர்ந்து 2-வது வாரமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.

வழிபாட்டு தலங்கள் மூடல்

கொரோனா 3-வது அலை பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இந்தநிலையில் 2-வது வாரமாக நேற்றுமுன்தினம் முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் மூடப்பட்டன.

பொங்கல் பண்டிகை நாட்களில் வழக்கமாக பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். ஆனால் கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 நாட்களாக கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை.

ஏமாற்றம்

இதனால் மருதமலை முருகன் கோவில், ராம்நகர் ராமர் கோவில் உள்பட பிரபல கோவில்களின் வாசலில் நின்று பொதுமக்கள் தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையில் நேரடி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எனினும் ஊரகப்பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களுக்கு மட்டும் பக்தர்கள் நேரில் சென்று வழிபட்டனர். அங்கும் கொரோனா வழிமுறையை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாவிட்டாலும் கோவில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடந்தன.

மகரஜோதி தரிசனம்

கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோயில் மகரஜோதி தரிசனம் நடந்தது. அப்போது மேல்சாந்தி பிரம்மஸ்ரீ ராஜேஷ் நம்பூதிரி மகரஜோதி காண்பித்தார்.மேலும் காட்டூர் மணிமுத்து மாரியம்மன் கோவில், பெரிய கடைவீதி மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நஞ்சப்பா சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம் மற்றும் ஒப்பணக்கார வீதியில் உள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருந்தன.