இப்பவோ அப்பவோ ஆட்டம் காணும் தொகுப்பு வீடுகள்

பொள்ளாச்சி அருகே உள்ள செம்மேடு கிராமத்தில் இப்பவோ... அப்பவோ... என்று தொகுப்பு வீடுகள் ஆட்டம் கண்டு வருகிறது. எனவே இந்த வீட்டில் பழங்குடியின மக்கள் பயத்துடன் குடியிருந்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள செம்மேடு கிராமத்தில் இப்பவோ... அப்பவோ... என்று தொகுப்பு வீடுகள் ஆட்டம் கண்டு வருகிறது. எனவே இந்த வீட்டில் பழங்குடியின மக்கள் பயத்துடன் குடியிருந்து வருகிறார்கள்.
பழங்குடியின கிராமம்
பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது செம்மேடு கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
தற்போது இந்த வீடுகள் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரைகளும் பழுதாகி இருக் கிறது. முக்கியமாக மேற்கூரையில் காரைகள் பெயர்ந்து விழுந்துவிட்டன. தற்போது கான்கிரீட் கம்பிகள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு எலும்புக்கூடு போன்று காட்சியளிக்கிறது.
பழுதான தொகுப்பு வீடுகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இந்த வீடுகள் மேலும் சேதமடைந்து இப்பவோ... அப்பவோ... என்று எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் தான் காட்சியளிக்கிறது.
இங்கு குடியிருந்து வரும் பழங்குடியின மக்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருவதால் அவர்களால் இந்த வீடுகளை சரி செய்ய முடியவில்லை. எனவே அவர்கள் அந்த பழுதான, ஆபத்தான நிலையில் இருக்கும் வீடுகளில்தான் அச்சத்துடன் குடியிருந்து வருகிறார்கள்.
இதுகுறித்து இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
மாற்று வீடுகள் வேண்டும்
கனமழை காரணமாக தொகுப்பு வீடுகள் அனைத்தும் சேத மடைந்து விட்டன. இருந்தபோதிலும் எங்களுக்கு வேறு வீடுகள் இல்லாததால் நாங்கள் அந்த வீடுகளில்தான் வேறு வழியில்லாமல் நாங்கள் குடியிருந்து வருகிறோம்.
இது தொடர்பாக அதிகாரிகளை பலமுறை சந்தித்து புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, உயர் அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டு எங்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






