அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது பூட்டிக்கிடந்த முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம்

அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது பூட்டிக்கிடந்த முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம்
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள முடீஸ் பகுதியில் தனியார் எஸ்டேட் நிர்வாகத்துக்கு சொந்தமான குடியிருப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இங்கு 2 டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுனர் ஆகியோர் பணியில் உள்ளனர்.
அவர்கள் உரிய நேரத்துக்கு வருவதில்லை என்று அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து வால்பாறை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் பாபுலட்சுமண் மற்றும் அதிகாரிகள் முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆய்வு பணிக்காக சென்றனர்.
அப்போது அந்த சுகாதார நிலையத்தில் பணியில் யாரும் இல்லாமல் அது பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story






