வால்பாறை பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்தது

வால்பாறை பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்தது
வால்பாறை
வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் பச்சை பசேலென காணப்பட்டது. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பருவமழை முடிவடைந்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 144 அடியாக குறைந்து உள்ளது. அதுபோன்று ஆறு மற்றும் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் குறைந்துவிட்டது.
குறிப்பாக கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு, வெள்ளமலை ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து நீரோடை போன்று இருக்கிறது. மேலும் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
Related Tags :
Next Story






