ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2022 8:26 PM IST (Updated: 18 Jan 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவை

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை உரிமம் வழங்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 

என்று வலியு றுத்தி கோவை கலெக்டர் அலு வலகம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவ லகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செல்பி எடுக்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். 

அவர்கள், பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். 

இதற்கு மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமை தாங்கினார். செயலா ளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
1 More update

Next Story